200 தொன் Laugfs எரிவாயுவை விநியோகிக்க திட்டம்

2 நாட்களில் 200 தொன் Laugfs எரிவாயுவை விநியோகிக்க திட்டம்

by Staff Writer 24-12-2021 | 3:49 PM
Colombo (News 1st) எதிர்வரும் 2 நாட்களுக்குள் 100 தொடக்கம் 200 தொன் வரையிலான Laugfs எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக Laugfs நிறுவனத்தின் தலைவர் K.M.வேகபிட்டிய தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் மேலும் 10,000 தொன் எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது 30,000 தொன் எரிவாயு கப்பல் ஊடாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை எரிவாயு நிரப்புத் தொகுதியில், சிலிண்டர்களுக்குள் எரிவாயுவை நிரப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக Laugfs நிறுவனத்தின் தலைவர் K.M.வேகபிட்டிய தெரிவித்தார். இதேவேளை, Laugfs எரிவாயு விநியோகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. மேல் மாகாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முதற்கட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக Laugfs நிறுவனத்தின் தலைவர் K.M.வேகபிட்டிய தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட லாப் எரிவாயுவின் தரம், சேர்மானம் என்பன உரிய முறையில் காணப்படுவதாக நேற்றைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தமையால், எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.