யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா

யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா

யாழில் மற்றுமொருவருக்கு மலேரியா

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2021 | 2:31 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு மலேரியா நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக நேற்று (23) சென்ற போதே குறித்த நபருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவருக்கு கடந்த 20 ஆம் திகதி காய்ச்சல் ஆரம்பமானதுடன், நேற்று போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய ஆபிரிக்க நாடொன்றில் கடந்த 07 மாதங்களாக தங்கியிருந்த குறித்த நபர் கடந்த 08 ஆம் திகதி நாடு திரும்பியதாக வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த மற்றுமொரு இளைஞருக்கும் கடந்த வாரம் மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த இளைஞரும் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்