மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக விக்கும் அத்துல களுஆராச்சி நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக விக்கும் அத்துல களுஆராச்சி நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக விக்கும் அத்துல களுஆராச்சி நியமனம்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2021 | 5:13 pm

Colombo (News 1st) விக்கும் அத்துல களுஆராச்சி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் அவர் இன்று (24) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்ன ஓய்வு பெறுவதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விக்கும் அத்துல களுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் , கொழும்பு சட்டக்கல்லூரியில் கற்று சட்டத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.

விக்கும் அத்துல களுஆராச்சியின் 33 வருட சேவைக்காலத்தில், 27 வருடங்கள் நீதவானாகவும் மாவட்ட நீபதியாகவும் குற்றவியல் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட நீதிபதியுமாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்