பங்களாதேஷில் பயணிகள் போக்குவரத்து படகில் தீ விபத்து; 37 பேர் பலி

பங்களாதேஷில் பயணிகள் போக்குவரத்து படகில் தீ விபத்து; 37 பேர் பலி

பங்களாதேஷில் பயணிகள் போக்குவரத்து படகில் தீ விபத்து; 37 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

24 Dec, 2021 | 3:18 pm

Colombo (News 1st) பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

படகு விபத்திற்குள்ளான போது அதில் 500 பேர் இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Jhakakathi பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

03 மாடிகளைக் கொண்ட பயணிகள் போக்குவரத்து படகில் முதலாவது என்ஜின் அறையில் தீ பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

310 பேர் மாத்திரமே பயணிக்கக்கூடிய குறித்த படகில் 500 பேர் வரை இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்