Colombo (News 1st) இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (24) காலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் ஈடுபட்டார்.
சுவாமி தரிசனத்தின் பின்னர் கோவில் வளாகத்திலுள்ள மண்டபத்தில் பிரமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இன்று மாலை வரை திருமலையில் தங்கவுள்ளதுடன், மாலை 5 மணிக்கு பின்னர் பிரதமர் நாடு திரும்பவுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாட்டிற்காக தனி விமானம் மூலமாக ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று சென்றார்.
ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசுவாமி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் திருப்பதி விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
