பங்கு விலைச் சுட்டெண் 12,000-ஐ தாண்டியது

பங்கு விலைச் சுட்டெண் 12,000-ஐ தாண்டியது

பங்கு விலைச் சுட்டெண் 12,000-ஐ தாண்டியது

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2021 | 7:37 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் இன்று பெருமளவு அதிகரித்துள்ளது.

வரலாற்றில் முதற்தடவையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (All Share Price Index – ASPI) 12,000-ஐ தாண்டியுள்ளது.

இன்றைய கொடுக்கல் வாங்கல் நிறைவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,070.68 ஆக அமைந்திருந்தது.

அது முன்னைய நாளுடன் ஒப்பிடுகையில் 119.45% அதிகரிப்பாகும்.

நாளை (25) நத்தார் பண்டிகை தினம் என்பதனால், இன்று மேலதிக அரை நாள் விடுமுறை கொழும்பு பங்குச்சந்தையினால் அறிவிக்கப்பட்டது.

அதன் காரணமாக இன்றைய நாளுக்கான கொடுக்கல் வாங்கல் முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 12.30 வரை 90 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இன்றைய பங்குச்சந்தையின் புரள்வு 2.84 பில்லியனாக அமைந்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்