by Staff Writer 23-12-2021 | 8:04 AM
Colombo (News 1st) 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.