விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைப்பதாக நாலக கொடஹேவா தெரிவிப்பு

by Staff Writer 23-12-2021 | 8:13 PM
Colombo (News 1st) அரசாங்கம் இலவசமாக வழங்கிய உரத்தை வீசி விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைப்பதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக இன்று (23) முற்பகல் மஹரகம வித்தியாலய சந்தியில் நடைபாதை மற்றும் வடிகாண் அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் கருத்து வௌியிட்டார். இதன்போது, ''திரவ உரம் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து விவசாயிகள் அவற்றை தூக்கி எறிவதை நான் கண்டேன். மிருகங்களுடன் தொடர்புடையவற்றை கொண்டே பெரும்பாலும் திரவ உரம் தயாரிக்கப்படுகிறது. ஆகவே அது துர்நாற்றம் வீசும். வாசனை திரவியங்களை கொண்டு உரம் தயாரிக்கப்பட மாட்டாது. வாசனை திரவியம் வேண்டுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்,'' என குறிப்பிட்டார். மேலும், விவசாயிகள் வீசுவது நாட்டு மக்களின் பணம் எனவும் அவ்வாறு செய்வது தேசிய குற்றம் எனவும் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்