பிரிட்டனில் ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு கொரோனா

பிரிட்டனில் ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 23-12-2021 | 4:42 PM
Colombo (News 1st) பிரிட்டனில் Omicron வகை கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,06,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, முதன்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இதுவரை 1,17,13,654 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,48,038 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 60,000-க்கும் மேற்பட்டோருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.