ஜனாதிபதி தலைமையில் சர்வதேச சிவில் விமான சேவையின் 77 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு

by Staff Writer 23-12-2021 | 7:42 PM
Colombo (News 1st) சர்வதேச சிவில் விமான சேவையின் 77 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. கட்டுநாயக்கவிலுள்ள ஶ்ரீலங்கா சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதி சிவில் விமான சேவைகள் சார்ந்த புத்தாக்கங்களையும் பார்வையிட்டார். சிவில் விமான சேவை துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பங்காற்றியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். விமான பயண ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பிற்காக 1944 ஆம் ஆண்டு 26 நாடுகள் இணைந்து சிகாகோ இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டதன் பின்னர் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பு உதயமானது. இலங்கை 1948 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றதுடன், இதுவரை 193 அங்கத்தவர்களை அந்த அமைப்ப கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.