பாராளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க தீர்மானம்

பாராளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க தீர்மானம்

பாராளுமன்றில் கடதாசி பாவனையை குறைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2021 | 10:13 am

Colombo (News 1st) பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மேசைகளில் அதிகளவிலான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் கடதாசிகள் என்பன காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதனடிப்படையில், பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பில் சபாநாயகருக்கு யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இந்த நடவடிக்கையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்