25 மாதங்களில் விவசாய அமைச்சிற்கு 5 ஆவது செயலாளர் நியமனம்

25 மாதங்களில் விவசாய அமைச்சிற்கு 5 ஆவது செயலாளர் நியமனம்

25 மாதங்களில் விவசாய அமைச்சிற்கு 5 ஆவது செயலாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2021 | 9:50 pm

Colombo (News 1st) விவசாயத்துறை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

D.M.L.D. பண்டாரநாயக்க, விவசாய அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர் கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்தாவது செயலாளராவார்.

இதனிடையே, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி மூலம் மாத்திரமே அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

உண்மையை உரைத்தமையே தாம் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தாம் வினவிய போது, அவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்ததாக சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்