பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்: போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

by Bella Dalima 22-12-2021 | 7:53 PM
Colombo (News 1st) பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று (22) தெரிவித்தார். தனியார் பஸ் சங்கங்களுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இதனைக் கூறினார். போக்குவரத்து அமைச்சில் இன்று முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பஸ் சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர்.