பண வீக்கம் இரட்டை இலக்கத்தை அடைந்தது

நவம்பர் மாதத்தில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தை அடைந்தது

by Staff Writer 22-12-2021 | 8:04 PM
Colombo (News 1st) ஒற்றை இலக்கமாகக் காணப்பட்ட நாட்டின் பண வீக்கம் எனப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வேகம் நவம்பர் மாதத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, நாட்டின் நவம்பர் மாத பண வீக்கம் 11.1 வீதமாக அமைந்துள்ளது. அது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.14 வீத அதிகரிப்பாகும். உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தமையே நவம்பர் மாதத்தில் பண வீக்கம் அதிகரித்ததற்கான முக்கிய காரணம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.