மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு; நாட்டின் எப்பகுதியிலும் மின் விநியோகம் தடைப்படலாம் 

மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு; நாட்டின் எப்பகுதியிலும் மின் விநியோகம் தடைப்படலாம் 

மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு; நாட்டின் எப்பகுதியிலும் மின் விநியோகம் தடைப்படலாம் 

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2021 | 4:30 pm

Colombo (News 1st) நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதால், நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (22) மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மின் விநியோகம் தடைப்படும் என அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

30 முதல் 45 நிமிடங்களுக்கு மின் விநியோகத் தடை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள இடங்களை குறிப்பிட்டு கூற முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்