எரிபொருள் விலையை அதிகரித்து டொலரை பாதுகாத்ததாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

எரிபொருள் விலையை அதிகரித்து டொலரை பாதுகாத்ததாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

எரிபொருள் விலையை அதிகரித்து டொலரை பாதுகாத்ததாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2021 | 2:05 pm

Colombo (News 1st) விநியோக முகாமைத்துவத்தினூடாக எரிபொருளுக்கான அந்நிய செலாவணி குறைவடையக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருளுக்கான சலுகைகளை வழங்க முடியாது என மத்திய வங்கியின் ஆளுநரை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகள் பெட்ரோலுக்காக செலுத்தும் கட்டணத்தின் அளவிற்கு எமது நாடும் அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

ஒரு லீட்டர் ப்ரீமியர் பெட்ரோலுக்காக 210 ரூபாவை நமது நாடு செலுத்துவதாகவும் இந்தியா 264 ரூபாவை செலுத்துவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்