எண்ணெய்க்கு பதில் தேயிலை: ஈரானிடம் பெற்ற கடனை செலுத்த புதிய உடன்படிக்கை

எண்ணெய்க்கு பதில் தேயிலை: ஈரானிடம் பெற்ற கடனை செலுத்த புதிய உடன்படிக்கை

எண்ணெய்க்கு பதில் தேயிலை: ஈரானிடம் பெற்ற கடனை செலுத்த புதிய உடன்படிக்கை

எழுத்தாளர் Bella Dalima

22 Dec, 2021 | 8:13 pm

Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஈரான் எண்ணெய் நிறுவனத்திற்கு நீண்ட காலமாக செலுத்த வேண்டியிருந்த 251 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை நிவர்த்திக்கும் நோக்கில், தேயிலை ஏற்றுமதி ஒப்பந்தமொன்று நேற்று (21) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஊடாக அந்நிய செலாவணி சேமிக்கப்படும் அதேவேளை, இந்தக் கடனை ரூபாவில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட அமைச்சர் ​ரமேஷ் பத்திரன மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கைத்தொழில், சுரங்கம் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் அலிரீசா பைமான்பார்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்