நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (21) வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 21-12-2021 | 8:18 AM
Colombo (News 1st) இன்று (21) காலை 08 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்திய அதிகாரிகளின் இடமாற்றம் உள்ளிட்ட 07 விடயங்களை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.