by Staff Writer 20-12-2021 | 3:54 PM
Colombo (News 1st) நாளை (21) காலை 08 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கொவிட் சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சை சேவைகளை எவ்வித தடங்கலுமின்றி முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.