by Staff Writer 20-12-2021 | 4:19 PM
Colombo (News 1st) பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான உத்தேச திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டுச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான உதவி வதிவிட பிரதிநிதி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கான ஆசிய பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கென்னி விக்னராஜா ஆகியோருடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம், மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக கென்னி விக்னராஜா, வௌிவிவகார அமைச்சருடனான இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.