சில பயிர்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடு

சில பயிர்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்

by Staff Writer 20-12-2021 | 2:10 PM
Colombo (News 1st) எதிர்காலத்தில் பல பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார். உள்ளூர் உற்பத்தி திறன் மற்றும் உள்ளூர் தேவையை கருத்தில்கொண்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனடிப்படையில் செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. இதேவேளை, பெரிய வெங்காயத்திற்கான உள்ளுர் தேவையில் 70 வீதமானவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.