மேல் மாகாண விசேட சுற்றிவளைப்பில் 147 பேர் கைது

மேல் மாகாண விசேட சுற்றிவளைப்பில் 147 பேர் கைது

by Staff Writer 19-12-2021 | 3:19 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பில் 15,685 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த போதைப்பொருள், சட்டவிரோத மதுபானம், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பண்டிகைக் காலத்தில் நாளாந்தம் இடம்பெறக்கூடிய குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.