by Staff Writer 19-12-2021 | 7:33 PM
Colombo (News 1st) இராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் இன்று (19) நடைபெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பை ஏற்று உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இராணுவ நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, பயிற்சியை நிறைவுசெய்து வௌியேறும் அதிகாரிகளின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
05 பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சிகளை நிறைவுசெய்த 316 Cadet அதிகாரிகள் இன்று (19) வௌியேறினர்.