யாத்திரிகர்களுடன் கதிர்காமம் சென்ற பஸ் விபத்து – 16 பேர் காயம்

யாத்திரிகர்களுடன் கதிர்காமம் சென்ற பஸ் விபத்து – 16 பேர் காயம்

யாத்திரிகர்களுடன் கதிர்காமம் சென்ற பஸ் விபத்து – 16 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2021 | 3:05 pm

Colombo (News 1st) கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களுடன் பயணித்த பஸ்ஸொன்று பதியத்தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிக ​வேகத்தில் பஸ்ஸை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்