by Staff Writer 18-12-2021 | 4:52 PM
Colombo (News 1st) நாட்டில் Omicron தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பிறழ்வு மிகவும் வேகமாக பரவக்கூடியது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டில் நால்வர் Omicron தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் Omicron தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் என்பதை இதனூடாக அறிந்துகொள்ள முடியும் என விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் Omicron வைரசை எதிர்கொள்ளும் திறன் 75 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 60 வயதிற்கும் மேற்பட்டோர், தமக்கான 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டு 2 மாதங்கள் நிறைவடைந்திருப்பின் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ வலியுறுத்தியுள்ளார்.