மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை 

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை 

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை 

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2021 | 5:37 pm

Colombo (News 1st) அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் இன்று (18) அதிகாலை கொள்ளைச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த நபர் நீதவானின் துணைவியாரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறித்துள்ளார்.

இதனை தடுக்க முற்பட்ட நீதிபதியை அந்நபர் தாக்கியதுடன், தாக்குதலில் நீதவானின் கை மற்றும் கால்களில் சிறு காயமேற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு இன்று அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.மொஹமட் ஹம்சாவும் வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீட்டிற்கு அருகிலிருந்த தென்னை மரம் மீதேறி வீட்டின் இரண்டாம் மாடிக்குள் சந்தேகநபர் உட்புகுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்