சந்தையில் மீண்டும் பால் மாவிற்கு தட்டுப்பாடு

சந்தையில் மீண்டும் பால் மாவிற்கு தட்டுப்பாடு

சந்தையில் மீண்டும் பால் மாவிற்கு தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2021 | 5:47 pm

Colombo (News 1st) அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட சில பால் மா நிறுவனங்களுக்கு பால்மாவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சந்தையில் மீண்டும் சில பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து கடந்த வாரமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களிலும் இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி, இறக்குமதி நிறுவனங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்