கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2021 | 6:05 pm

Colombo (News 1st) அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பள முரண்பாடு மற்றும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுற்றறிக்கை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் 6 மாத காலத்திற்குள் தீர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்ற
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வட மாகாண அதிபர்கள் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்