விடுமுறையை கழிக்க வௌிநாடு செல்லவுள்ள 60 பாராளுமன்ற உறுப்பினர்கள்

விடுமுறையை கழிக்க வௌிநாடு செல்லவுள்ள 60 பாராளுமன்ற உறுப்பினர்கள்

விடுமுறையை கழிக்க வௌிநாடு செல்லவுள்ள 60 பாராளுமன்ற உறுப்பினர்கள்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2021 | 10:30 pm

Colombo (News 1st) ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வருட இறுதியில் விடுமுறையை கழிப்பதற்காக வௌிநாடு செல்லவுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

குறித்த மக்கள் பிரதிநிதிகள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று, அங்கு கல்வி பயிலும் அல்லது வசிக்கும் தமது பிள்ளைகளை பார்க்கவுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நுவரெலியாவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரத்தியேக ஜெனரல் மாளிகை டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்