மானிப்பாயிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து சிலர் தாக்குதல்; மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தினர்

மானிப்பாயிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து சிலர் தாக்குதல்; மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தினர்

மானிப்பாயிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து சிலர் தாக்குதல்; மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தினர்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2021 | 10:34 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நவாலி பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் நேற்று (15) நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுள்ளனர்.

நவாலி வடக்கு மானிப்பாயிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த குழுவினர் வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

பின்னர் குறித்த குழுவினர் தப்பிச்சென்றுள்ளதுடன், இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்