English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
16 Dec, 2021 | 3:53 pm
Colombo (News 1st) பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, ‘மகள்கள் மற்றும் சகோதரிகளின் உடல்நலம் குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து இந்திய மகள்களை பாதுகாக்க அவர்கள் சரியான நேரத்தில் திருமணம் செய்துகொள்வது அவசியம். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நிதி ஆயோக் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பெண்களின் திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தக்குழு பெண்களின் திருமண வயதை 18 இல் இருந்து 21ஆக உயர்த்த பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், பின்னர் அது சட்டமாக அமுலுக்கு வரும்.
14 May, 2022 | 03:11 PM
10 May, 2022 | 08:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
contact[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS