இரு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

இரு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

இரு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2021 | 1:07 pm

Colombo (News 1st) இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் சட்டத்தை மீறி உற்பத்திகளை சந்தைக்கு விநியோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்டப் பிரிவினால் இது தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்வரும் வாரமளவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.

இதனிடையே, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்திய எரிவாயு நிறுவனங்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என சீனிகம தேவாலயத்தில் இன்று (16) வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்களால் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்