by Staff Writer 15-12-2021 | 3:06 PM
Colombo (News 1st) - Update
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) பகல் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகளும் கட்டுப்பாட்டாளர்களும் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.
பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் பின்னர், கொழும்பு கோட்டையிலிருந்து ரயில்கள் புறப்பட்டுச் செல்வதாகவும் அவர் கூறினார்.
-------------------------------------------------------------------------------------------------
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
பகிஷ்கரிப்பு காரணமாக தற்போது எந்தவொரு ரயிலும் போக்குவரத்தை ஆரம்பிக்கவில்லை என அவர் கூறினார்.