வவுனியாவில் பெண் சுட்டுக்கொலை 

வவுனியாவில் பெண் சுட்டுக்கொலை 

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2021 | 2:56 pm

Colombo (News 1st) வவுனியா – நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பெண் மீது இன்று முற்பகல் 11 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

சேனப்புலவு பகுதியை சேர்ந்த 34 வயதான பெண்ணே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த பெண்ணின் மச்சான் முறை உறவுக்காரர், காட்டுக்குள் ஒளிந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்