தலவாக்கலையில் ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி

தலவாக்கலையில் ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி

தலவாக்கலையில் ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2021 | 4:01 pm

Colombo (News 1st) தலவாக்கலை சென். கிளயர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (15) பகல் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

சென். அன்ரூஸ் தோட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்