சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது: மைத்திரிபால சிறிசேன

சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது: மைத்திரிபால சிறிசேன

சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது: மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2021 | 7:46 pm

Colombo (News 1st) சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கட்சித் தலைமையகத்தில் கருத்து தெரிவித்தார்.

இதன்போது, சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாதென அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்துவது பொருத்தமற்றது என மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நிபுணர்கள் எவரேனும் சீனா சென்று விடயங்களை ஆராய்ந்த பின்னரே உரத்தை நாட்டிற்கு கொண்டுவர தீர்மானித்திருப்பார்கள். எனவே, அவர்கள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்