இங்கிலாந்தில் கொவிட் அனுமதி அட்டை கட்டாயம்

இங்கிலாந்தில் கொவிட் அனுமதி அட்டை கட்டாயம்

by Staff Writer 15-12-2021 | 12:27 PM
Colombo (News 1st) இங்கிலாந்தில் கொவிட் அனுமதி அட்டை நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் இந்தத் திட்டம் மீதான வாக்கெடுப்பில், அவரது கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்த போதிலும், தொழிற்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரவு நேர களியாட்ட நிலையங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரிய நிகழ்வுகளுக்குச் செல்வதற்கு வயது வந்தோரிடம் கொவிட் அனுமதி அட்டை இருக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டதற்கான அட்டை அல்லது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், தொற்றில்லையென்ற சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை கொவிட் அனுமதி அட்டையாகப் பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.