அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டிற்கு பயணம்

அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டிற்கு பயணம்

அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டிற்கு பயணம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2021 | 7:56 am

Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று (15) அதிகாலை வௌிநாட்டிற்கு பயணித்துள்ளார்.

நிதி அமைச்சர், துபாய் நோக்கி பயணித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

இன்று (15) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தினூடாக துபாய்க்கு சென்றுள்ளார்.

இதேவேளை, தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வௌிநாட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்