விதைகள் இறக்குமதியை வரையறுக்க நடவடிக்கை

விதைகள் இறக்குமதியை வரையறுக்க நடவடிக்கை

by Bella Dalima 14-12-2021 | 3:49 PM
Colombo (News 1st) ஏழு வகை விதைகளின் இறக்குமதியை அடுத்த வருடம் முதல் வரையறுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சின்னவெங்காயம், உழுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளை இறக்குமதி செய்வதை வரையறுப்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி , அளுத்கம மிளகாய் விதை உற்பத்தி கிராமத்தில் 1500 கிலோகிராம் கலப்பு விதைகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தம்புளை - திகம்பதன விவசாய பண்ணையில் பெரிய வெங்காய விதை உற்பத்தி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா அரச விவசாய பண்ணையில் உருளைக்கிழங்கிற்கான விதை உற்பத்தி முன்னெடுக்கப்படுவதுடன், சின்ன வெங்காயம், உழுந்து, நிலக்கடலை மற்றும் சோள விதைகளுக்கான உற்பத்தியும் வெற்றிகரமாக இடம்பெறுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.