முகமாலையில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி

முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி

by Bella Dalima 14-12-2021 | 3:23 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி நீதவான் எஸ்.லெனின் குமார் குறித்த பகுதிக்கு இன்று காலை கள விஜயம் மேற்கொண்டதன் பின்னர் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கியதாக பொலிஸார் கூறினர். அதற்கமைய, நாளை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, கிராம உத்தியோகத்தர், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட குழுவினரும் முகமாலைக்கு இன்று சென்றிருந்தனர். முகமாலையிலுள்ள காணியொன்றில் கடந்த 11 ஆம் திகதி வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.​