எரிவாயு அடுப்பு வெடிப்பு: யாழில் பெண் காயம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: யாழில் பெண் காயம்

by Bella Dalima 14-12-2021 | 7:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - துன்னாலை, கோவில் கடவை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (14) காலை எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இதனால் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டின் கூரைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையலறையிலும் இன்று காலை எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது. இதனால் சமையலறைக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை - பொத்துவில், மயிலக்காஸ் தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றியுள்ளது. அத்துடன், கண்டி - உடுநுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட தவுலகல பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றியுள்ளது.