எரிவாயு அடுப்பு வெடிப்பு: யாழில் பெண் காயம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: யாழில் பெண் காயம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: யாழில் பெண் காயம்

எழுத்தாளர் Bella Dalima

14 Dec, 2021 | 7:17 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – துன்னாலை, கோவில் கடவை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (14) காலை எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இதனால் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டின் கூரைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையலறையிலும் இன்று காலை எரிவாயு அடுப்பு தீப்பற்றியுள்ளது. இதனால் சமையலறைக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை – பொத்துவில், மயிலக்காஸ் தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றிலும் எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றியுள்ளது.

அத்துடன், கண்டி – உடுநுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட தவுலகல பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்