16 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

16 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2021 | 9:23 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாழைச்சேனை – தொப்பிகல பகுதியில் 16 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை கடதாசி ஆலை வளாகத்திலிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர், 16 மோட்டார் குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசார​ணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்