சோளம், கோதுமை இறக்குமதிக்கு அனுமதி

விலங்குணவு உற்பத்திக்காக சோளம், கோதுமை இறக்குமதிக்கு அனுமதி

by Staff Writer 13-12-2021 | 5:24 PM
Colombo (News 1st) விலங்குணவு உற்பத்திக்காக சோளம் மற்றும் கோதுமை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 40,000 மெட்ரிக் தொன் சோளம் மற்றும் 200,000 மெட்ரிக் தொன் கோதுமை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவித்தார்.