பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் Harnaaz Sandhu

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் Harnaaz Sandhu

பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் Harnaaz Sandhu

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2021 | 3:11 pm

Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக இந்தியாவின் Harnaaz Sandhu வாகை சூடியுள்ளார்.

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான Eilat நகரில் 2021 பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற Harnaaz Sandhu 2021 பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த வருடம் பிரபஞ்ச அழகியாக மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூடினார்.

இந்தியா சார்பில் சுஸ்மிதா சென் 1994 ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை சுவீகரித்திருந்தார்.

தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் பிரபஞ்ச அழகியாக Harnaaz Sandhu மகுடம் சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்