ஒரு தொகை சோள விதைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்

ஒரு தொகை சோள விதைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்

ஒரு தொகை சோள விதைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2021 | 3:47 pm

Colombo (News 1st) Aflatoxin அடங்கிய சோள விதைகளை கொண்ட 15 கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் உணவு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவினால், மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவை கொள்வனவாளர்களின் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சோள விதைகள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சோள விதைகளில் பூஞ்சைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சோள விதைகளை அழிப்பதற்கான உத்தரவை நீதிமன்றத்திடமிருந்து பெற எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்