பல்கலைக்கழகங்களை ஜனவரியில் மீள திறக்க தீர்மானம் – UGC

பல்கலைக்கழகங்களை ஜனவரியில் மீள திறக்க தீர்மானம் – UGC

பல்கலைக்கழகங்களை ஜனவரியில் மீள திறக்க தீர்மானம் – UGC

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2021 | 4:25 pm

Colombo (News 1st) புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சில பல்கலைக்கழக விடுதிகளில் 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள காரணத்தினால், அவர்களை மீளவும் அழைத்தால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்