இன்றும் (12) மின்வெட்டு அமுல்

இன்றைய தினமும் (12) மின்வெட்டு அமுல்

by Staff Writer 12-12-2021 | 2:27 PM
Colombo (News 1st) இன்றைய தினமும் (12) மாலை 06 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் சில பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.