அரசின் நிதியை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கான அறிவித்தல்

அரசின் நிதியை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கான அறிவித்தல்

அரசின் நிதியை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கான அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2021 | 3:15 pm

Colombo (News 1st) கலாநிதி பட்டங்களுக்காக அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்று அதனை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை (EPF) வழங்காமலிருப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமது கலாநிதி பட்டப்படிப்பை இடைநடுவே கைவிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கத்தினால் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், அத்தகைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமக்கான ஓய்வூதியத்தை பெறும்போது, அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை ஊழிய​ர் சேமலாப நிதியிலிருந்து குறைத்துக் கொள்ளவுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

இவ்வாறான விரிவுரையாளர்களில் சிலர் தற்போது பல்கலைக்கழகங்களில் இருந்து விலகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் நாட்டின் 12 பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறு 12,000 விரிவுரையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்