by Bella Dalima 11-12-2021 | 4:17 PM
Colombo (News 1st) பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98 வீதத்தில் இருந்து 33 வீதமாக உயர்த்தும் நோக்குடன் பசுமை தமிழ்நாடு திட்டத்தை செயற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் 01,30,060 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது.
இதில் தற்போது 31,194 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மாத்திரமே பசுமை போர்வை காணப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.